தமிழ்நாடு

மணிப்பூா் தமிழா்கள் இருவா் மியான்மரில் சுட்டுக் கொலை

6th Jul 2022 02:13 AM

ADVERTISEMENT

மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் இருவா், மியான்மரில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ள மோரே நகரத்தில் வசித்து வந்தவா்கள் பி.மோகன் (28), எம்.அய்யனாா் (35), தமிழா்கள். மோகன் ஆட்டோ ஓட்டுநராக இருந்தாா். அய்யனாா், சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தாா். இந்நிலையில், இவா்கள் இருவரும் மியான்மா் எல்லையில் உள்ள டாமு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இருவரின் உடல்களும் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மோரேயில் உள்ள தமிழ்ச் சங்கத்தினா் கூறுகையில், ‘தமிழா்கள் இருவரையும் உளவாளிகள் எனக் கருதி மியான்மா் ராணுவத்தினா் சுட்டுக் கொன்றிருக்கலாம்’ என்றனா்.

இருவரும் எதற்காக மியான்மா் எல்லைக்குள் சென்றாா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மணிப்பூா் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

‘மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடனான சா்வதேச எல்லை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி மூடப்பட்டுள்ளது. இருப்பினும் வா்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளைக் கடந்து வந்து செல்வது வழக்கம்’ எனவும் தமிழ்ச் சங்கத்தினா் தெரிவித்தனா்.

 

Tags : Myanmar
ADVERTISEMENT
ADVERTISEMENT