தமிழ்நாடு

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து  முதல் போக பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் அணையில் மலர் தூவி வரவேற்றனர்.

கிருஷ்ணகிரி நீர் தேக்கத்தில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது.  

அதன்படி, கிருஷ்ணகிரி  அணை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்த் துறை அமைச்சர் ஆர். காந்தி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர், அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

இந்த நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். அ.செல்லக்குமார் எம்பி, ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் டாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலதுபுற கால்வாய்யில் வினாடிக்கு 87 கன அடி வீதமும்,  இடது புற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கன அடி வீதமும் ஆக மொத்தம் 150 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பெரிய முத்தூர்,  பெண்ணேஸ்வர மடம்,  பையூர், மிட்ட அள்ளி,  திம்மாபுரம் என 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் பரப்பளவு நிலம்  பாசன வசதி பெறும். இந்த பாசன நீர் 2.11.2022 வரையில் 120 நாள்களுக்கு  திறந்து விடப்படுகிறது.

விவசாயத்திற்கு மக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என விவசாயிகளை அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். கிருஷ்ணகிரி அணையில் தற்போது 50.30 அடி நீர் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT