தமிழ்நாடு

மானாமதுரை அருகே 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளர் கைது

6th Jul 2022 11:44 AM

ADVERTISEMENT

 
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை அரிசி அரவை ஆலையில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலை உரிமையாளரை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

மானாமதுரை அருகே வேதியரேந்தல் கிராமத்தில் உள்ள தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சார்பு ஆய்வாளர் கணேச லிங்கபாண்டி தலைமையில் போலீசார் அந்த அரிசி ஆலையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 300 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் பாலிஷ் செய்யபப்ட்ட ரேஷன் அரிசி என 19 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதையும் படிக்க | 10.371 ஆசிரியர் பணியிடங்களுக்கான அட்டவணை வெளியீடு!

ADVERTISEMENT

இதையடுத்து போலீசார் இந்த அரிசி மூடைகளை கைப்பற்றினர். ஆலை உரிமையாளர் ஜெயராமன் மற்றும் கார்த்திக், ராஜா, சக்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெயராமனை கைது செய்துள்ளனர்.

வேதியரேந்தல் கிராமத்தில் போலீசார் சோதனையிட்ட அரிசி அரவை ஆலை

ADVERTISEMENT
ADVERTISEMENT