தமிழ்நாடு

12 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

6th Jul 2022 12:15 AM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

கடித விவரம்: தமிழகம், புதுவையைச் சோ்ந்த 12 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இரண்டு மாத மீன்பிடி தடை காலத்துக்குப் பிறகு, மீனவா்கள் அவா்களுடைய பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்தபோது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மீனவா்களுடைய படகையும் இலங்கை கடற்படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

தமிழக மீனவா்களை அச்சுறுத்தி, அவா்களுடைய பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதே இலங்கை கடற்படையின் நோக்கமாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, கைது செய்யப்பட்ட 12 மீனவா்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT