தமிழ்நாடு

லீனா மணிமேகலையின் காளி போஸ்டர் பதிவை நீக்கியது டிவிட்டர்

6th Jul 2022 05:44 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் லீனா மணிமேகலையின் காளி போஸ்டர் பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

ஹிந்துக்கள் போற்றி வணங்கும் பெண் தெய்வமான காளியின் சா்ச்சைக்குரிய, "காளி" ஆவணப்படம் ஜூலை மாதம் 2ஆம் தேதி கனடாவின் டொரண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தின் திரையிடப்பட்டது. அது தொடர்பான போஸ்டரை லீனா மணிமேகலை டிவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. காளி போஸ்டர் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த அருங்காட்சியகம்; ஆவணப்படம் நீக்கம் 

இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடா்பாக லீனா மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் தில்லி காவல்துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், வருத்தம் தெரிவித்திருக்கும் ஆகா கான் அருங்காட்சியகம், அந்த ஆவணப்படத்தை திரையிடுவதிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், ஜூலை 2ஆம் தேதி லீனா மணிமேகலை வெளியிட்ட காளி போஸ்டர் பதவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT