தமிழ்நாடு

ஆவின் உப பொருள்கள் விற்பனை அதிகரிக்க சா.மு. நாசர் அறிவுறுத்தல்

DIN

ஆவின் உப பொருள்கள் விற்பனையை அதிகரிக்கவும், அனைத்து நுகர்வோர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யவும் மொத்த விற்பனையாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவுறுத்தியுள்ளார்.

நந்தனம் ஆவின் இல்லத்தில்  பால்வளத்துறை அமைச்சர் . சா.மு.நாசர் தலைமையில் ஆவின் பால் உப பொருட்கள் மொத்த விற்பனையாளர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆவின் உபபொருட்களாகிய நெய், வெண்ணெய், தயிர், மோர், லஸ்ஸி, பனீர், பால்கோவா, ஐஸ்கிரீம், சாக்லேட், டெய்ரி ஒயிட்னர், நறுமணப்பால் போன்ற பால் பொருட்கள் பல்வேறு வகைகளாக பல்வேறு சிப்பங்களில் 215 க்கும் மேற்பட்ட எஸ்கேயுக்கள் தயாரிக்கப்படுவது குறித்து மொத்த விற்பனையாளர்களுக்கு விவரிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர், மொத்த விற்பனையாளர்களின் கருத்து மற்றும் குறைகளை கேட்டு அதனை விரிவாக விவாதித்தார் மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

மேலும், அமைச்சர் ஆவின் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுக்க பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பால் உப பொருட்களாகிய தயிர், மோர், லஸ்ஸி, போன்ற அனைத்து பால் பொருட்களின் உற்பத்தி திறன் முழுவதையும் பயன்படுத்தும் விதமாக உற்பத்தி இலக்கினை நிர்ணயித்து விற்பனையை அதிகரிக்க உத்தரவிட்டார்.

இதில் அமைச்சர் அனைத்து பாலகங்களிலும் பால் உப பொருட்கள் இருப்பினை உறுதி செய்ய உத்தரவிட்டார். பால் உப பொருட்கள் தயாரிக்க தேவையான மூல பொருட்கள் தயார் நிலையில் கொள்முதல் செய்து இருப்பில் வைக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவ்வப்போது தங்கள் பகுதிக்குட்பட்ட விற்பனை மையங்கள் மற்றும் பாலகங்களை நேரில் சென்று ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு  அமைச்சர் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT