தமிழ்நாடு

மாநிலங்களவை உறுப்பினராகும் இளையராஜா!

6th Jul 2022 08:17 PM

ADVERTISEMENT


மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும், தடகள வீராங்கனை பி.டி. உஷாவும் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். அந்தவகையில், தற்போது இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

படிக்க | இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது அமெரிக்காவில் உள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, பிரதமர் மோடி குறித்த புத்தகத்தின் முன்னுரைக்கு அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் பேசுபொருளானது.

தடகளப் போட்டியில் மாநில, தேசிய அளவில் சாதனை புரிந்தவர் தடகள வீராங்கனை பி.டி.உஷா. மேலும், ஆந்திரத்தைச் சேர்ந்த கதாரிசியரான விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பல தலைமுறைகளாக பல்வேறு தரப்பட்ட மக்களைக் கவர்ந்தவர் இளையராஜா. அவரது பாடல்களில் பலவிதமான உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன. பலருக்கு ஊக்கமளிக்கும் வகையிலான வாழ்க்கை முறையைக் கொண்டவர். எளிமையான பின்னணியிலிருந்து வந்து மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தவர். அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT