தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்

6th Jul 2022 07:06 PM

ADVERTISEMENT


மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகரான சென்னையிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படிக்கபூஸ்டர் தடுப்பூசிக்கு இடைவெளி குறைப்பு

ADVERTISEMENT

இதனால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுஇடங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநகரப் பேருந்திகளில் முகக்கவசம் அணிந்து பணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT