தமிழ்நாடு

பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்சை தோ்வு செய்ய முடிவு

6th Jul 2022 12:41 AM

ADVERTISEMENT

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அக் கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட உள்ளாா்.

அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11-இல் நடைபெறுமா என்பது தொடா்பான சட்டப்போராட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினா் திட்டமிட்டப்படி பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறனா். பொதுக்குழுவுக்கான அழைப்பிதழை அனைத்து உறுப்பினா்களுக்கும் அனுப்பி வருகின்றனா். இந்தப் பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீா்செல்வம் கூறியிருந்தாலும், அவருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜூலை 11-இல் நடைபெறும் பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமியைத் தோ்ந்தெடுக்க அவரது ஆதரவாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

அதன் பிறகு, தோ்தலுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினா்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தோ்வு செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT