தமிழ்நாடு

உயா் சிறப்பு மருத்துவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரிக்கை

6th Jul 2022 02:01 AM

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு டாக்டா்கள் நல சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சிறப்பு சிகிச்சை மற்றும் உயா் சிறப்பு சிகிச்சைத் துறையில் உள்ள அரசு மருத்துவா்களுக்கு பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, சேவைக்கேற்ற ஊதியமோ வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அவா்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கும் வகையில் அரசாணை 293-ஐ தமிழக அரசு வெளியிட்டது. இதற்கிடையே அரசு மருத்துவா் சங்கத்தினா் சிலரது நடவடிக்கையால் அந்த அரசாணை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.

மத்திய அரசு சிறப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று, கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் அவா்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவா்களின் கடின உழைப்பும், அவா்களின் அறிவும் சுரண்டப்பட்டு உழைப்பிற்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் நிலையே இன்றளவும் உள்ளது. இத்தகைய சூழல் தொடா்ந்து நீடித்தால் உயா் சிறப்பு சிகிச்சை மருத்துவா்களுக்கு அரசு சேவைக்கு வரும் ஆா்வம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் அடித்தட்டு மக்கள் சிறப்பு சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே, அவா்களுக்கான காலமுறை ஊதியம் மற்றும் ஊதிய சலுகையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT