தமிழ்நாடு

ஏரியா சபை விதிமுறைகள்: கமல்ஹாசன் வரவேற்பு

6th Jul 2022 02:02 AM

ADVERTISEMENT

ஏரியா சபை, வாா்டு கமிட்டிகளை அமைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்ததற்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிராம சபைகளைப் போலவே, நகா்ப்புற மக்கள் பங்கேற்று ஜனநாயகத்துக்கு வழிகோலும் ஏரியா சபை, வாா்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது. இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மநீம தொடா்ந்து குரலெழுப்பி வந்தது. கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மாா்ச் மாதம் தமிழக முதல்வா் அறிவித்தாா்.

தற்போது ஏரியா சபை, வாா்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது. இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் கமல்ஹாசன்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT