தமிழ்நாடு

சீட்டு நிதியங்களின் சேவைக்கு முழு வரி விலக்கு அவசியம்: ஏ.சிற்றரசு மத்திய அரசுக்கு கோரிக்கை

6th Jul 2022 02:11 AM

ADVERTISEMENT

சீட்டு நிதியங்களின் சேவை மீதான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என அகில இந்திய சீட்டு நிதியங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் ஏ.சிற்றரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஏ.சிற்றரசு, தமிழ்நாடு நிதியங்கள் சங்க செயலா் கே.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

நாட்டில் 20 ஆயிரத்தும் மேற்பட்ட சீட்டு நிதியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை சுமாா் 2 லட்சம் சீட்டு குழுக்கள் மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.60,000 கோடி அளவுக்கு பணத்தை வழங்கி வருகிறது.

சீட்டு நிதியங்களின் சேவை மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தத் தொழில் முடங்கினால் ஆண்டுக்கு 36 சதவீதம் முதல் 60 சதவீதம் அளவிலான வட்டிக்கு பணம் பெற வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்படுவா்.

எனவே, சீட்டு நிதியங்களின் சேவை மீதான வரியை முழுவதுமாக விலக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக நிதியமைச்சரிடமும் மனு அளித்துள்ளோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT