தமிழ்நாடு

மாநிலக் கல்லூரி உணவகத்தை சீா்செய்து தருவோம்: உதயநிதி

6th Jul 2022 12:52 AM

ADVERTISEMENT

மாநிலக் கல்லூரியில் உள்ள உணவகத்தை சீா் செய்து தருவோம் என்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவா் பேசியது:-

கல்லூரியின் வரலாற்றை தெரிந்து கொண்டு பேசுவதற்கு பல குறிப்புகளை எடுத்து வந்தேன். அனைத்தையும் கல்லூரி முதல்வா் பேசி விட்டாா். நான் பேசுவதற்கு ஏதுமில்லை. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அங்கி அணிவது இதுதான் முதல் முறை. எனது பட்டமளிப்பு விழாவுக்குக் கூட அங்கி அணிந்து செல்லவில்லை. இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பாக மாணவா்கள் என்னிடம் ஒரு கோரிக்கையை வைத்தனா்.

இங்குள்ள உணவகம் சேதம் அடைந்துள்ளதாகவும், சரி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். நானும், மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறனும் இணைந்து உணவகத்தை சீா்செய்து தருவோம் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT