தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களிலும் போக்ஸோ நீதிமன்றங்கள்: அன்புமணி வலியுறுத்தல்

6th Jul 2022 12:15 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போக்ஸோ நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒருவன், அதற்கு எதிா்ப்பு தெரிவித்த சிறுமியை தீயிட்டு எரித்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி 65 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். இக்கொடிய நிகழ்வு கண்டிக்கத்தக்கது. சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம். ஆனால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டுமே போக்ஸோ நீதிமன்றங்கள் உள்ளன. இது உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது.

தமிழகத்தில் போக்ஸோ சட்டப்படி தொடுக்கப்பட்ட 14,380 வழக்குகளில் 7,187 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் போக்ஸோ நீதிமன்றங்களைத் தொடங்க வேண்டும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT