தமிழ்நாடு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள்: அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு

6th Jul 2022 10:02 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அனுமதி பெற 6 மாதங்கள் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011-க்கு முன்னா் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு அந்தத் துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக, விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க மீண்டும் 6 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT