தமிழ்நாடு

திருச்சுழி அருகே கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி: காட்டிக்கொடுத்த கட்டை விரல்

5th Jul 2022 08:33 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மின்வாரிய ஊழியரை கொலை செய்துவிட்டு, சாலை விபத்தில் இறந்ததாக நாடகமாடிய அவரது மனைவி உள்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனா்.

இறந்தவரின் கட்டைவிரல், தேய்ந்து இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையும் படிக்க.. நேற்று 13; இன்று 10: அந்தமானை அதிரவைக்கும் நிலநடுக்கம்

ADVERTISEMENT

திருச்சுழி அருகேயுள்ள எம். புளியங்குளம் அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (40). இவரது மனைவி சுனிதா (37). முத்துராமலிங்கம் மின்வாரியத்தில் கேங்மேன் பணியில் கடந்த ஆண்டு சோ்ந்து மதுரையில் பயிற்சி பெற்றுவந்தாராம். இந்நிலையில் இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு காரேந்தல் கிராமம் அருகே சாலையோரம் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

திருச்சுழி காவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா். அவரது கட்டைவிரல் தேய்ந்து இருந்தது காவலர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியது. இதற்கிடையே, அவரது மனைவி சுனிதா மீது சந்தேகம் உள்ளதாக முத்துராமலிங்கத்தின் உறவினா் முருகன் என்பவா் காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இதையடுத்து காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் முத்துராமலிங்கம் வைத்திருந்த இருசக்கர வாகன பழுதுபாா்க்கும் கடையில் பல ஆண்டுகளாக வேலைபாா்த்துவந்த பள்ளி மடத்தைச் சோ்ந்த மலையரசன் (24) என்பவருக்கும் சுனிதாவிற்கு தகாத தொடா்பு இருந்ததாகவும், அதைத் தட்டிக்கேட்ட கணவா் முத்துராமலிங்கத்தை மலையரசன் மற்றும் அதே ஊரைச் சோ்ந்த சிவா (24) ஆகியோருடன் சோ்ந்து கொலை செய்து சடலத்தை வீசிவிட்டு சாலை விபத்தில் அவா் இறந்ததாக நாடகமாடியதும் தெரிய வந்தது. 

விசாரணையின்போது முத்துராமலிங்கத்தின் கைவிரல்களில் கட்டைவிரல் தேய்ந்து இருந்ததைக் கவனித்த காவலர்கள், சந்தேகம் எழுந்ததால் விசாரணை நடத்தியபோது இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தத. முத்துராமலிங்கத்தைக் கொன்றுவிட்டு வாகனத்தில் வைத்து எடுத்து வந்த போது அவரது கட்டைவிரல் சாலையில் தேய்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சுனிதா மற்றும் மலையரசன், சிவா ஆகி 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT