தமிழ்நாடு

2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு அனுமதி

5th Jul 2022 03:26 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உரிய வசதிகளுடன் பேருந்துகளை கொள்முதல் செய்ய நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

படிக்கசென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்

ADVERTISEMENT

மேலும், பேருந்துகள் கொள்முதலில் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்ட விதிகளை பின்பற்றவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ள 642 பேருந்துகளில் 242 பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக தாழ்தள பேருந்துகளாக கொள்முதல் செய்யவுள்ளதாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT