தமிழ்நாடு

சென்னையில் மிதமான மழை

5th Jul 2022 08:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று(செவ்வாய் கிழமை) மாலை முதல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தென்ப்பட்ட நிலையில், நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அதே நேரத்தில் சென்னை அம்பத்தூர், ஆவடி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட  நகரின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது வெப்பம் தனிந்தது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருந்தது.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காலரக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT