தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,662 பேருக்கு கரோனா; சென்னையில் 1,060

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,662 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று 2,654 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

அதில், இன்று புதிதாக 2,662 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,88,091-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல வாரங்களுக்கு பின்னர் கரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இதனால் மொத்த உயிரிழப்பு 38,027 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 1,512 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,33,299-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக  1,060 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 373, கோவை 137, திருவள்ளூர் 132, திருச்சி 112, காஞ்சிபுரம் 89, கன்னியாகுமரி 72, மதுரை 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT