தமிழ்நாடு

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்

5th Jul 2022 03:11 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் முகக்கவசம் அணிவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், சென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையும் படிக்க: மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: ஃபட்னவீஸ்

இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மேலும், வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், துணிக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் அந்தந்த வார்டுக்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களின் ஆய்வின் போது முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.500/- அபராதம் விதிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும் பொழுது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு நாளை (06.07.2022) முதல் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939ன் படி ரூ.500/- அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”

ADVERTISEMENT
ADVERTISEMENT