தமிழ்நாடு

வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

5th Jul 2022 03:51 PM

ADVERTISEMENT

 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுழைவு வாயிலில் நின்று அலுவலக வளாகத்துக்குள் செல்ல  காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடைய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய செயலாளர் வி.இளையபெருமாள் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

மாவட்ட துணைச் செயலாளர் கே.சித்தார்த்தன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும் ரூ.381 சம்பளம் வழங்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT