தமிழ்நாடு

இடிந்துவிழும் அபாயத்தில் ஈரோடு மாநகராட்சி அரசுப் பள்ளி: ஆசிரியர்கள் முற்றுகை

5th Jul 2022 11:58 AM

ADVERTISEMENT

 

ஈரோட்டில் மாநகராட்சி அரசு பள்ளியின் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்  கட்டடத்தை சீர் செய்ய வலியுறுத்தி பெற்றோர்கள் தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள்  மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6,7,8 ம் வகுப்புகள் அந்த பள்ளியின் அருகிலேயே  பள்ளிக்கு சொந்தமான மற்றொரு பழைய  கட்டடத்தில் இயங்கி வருகிறது.இங்கு மட்டும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று  பள்ளிக்கு மாணவிகள் வந்து பார்த்த போது பள்ளியின் பக்கவாட்டில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதனை கண்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனடியாக சீர் படுத்தி தர வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு மாணவிகளை  விட வந்த பெற்றோர்கள் அங்கு வந்த தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் அதுவரை மாணவிகளுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தில் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதே இடத்தில் பள்ளி செயல்பட்டால் மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்..
 

ADVERTISEMENT
ADVERTISEMENT