தமிழ்நாடு

கோவை: கணுவாய் மலைப்பகுதியில் ஒற்றைக் காட்டுயானை; மக்கள் அச்சம்

5th Jul 2022 10:09 AM

ADVERTISEMENT


நீண்ட நாள்களுக்குப் பிறகு கணுவாய் மலைப்பகுதியில் ஒற்றை யானை சென்றதை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். ஒற்றை யானையால் அப்பகுதிவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை கணுவாயை அடுத்த நர்சரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஒற்றைக் காட்டுயானை  சென்றுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க.. திருச்சுழி அருகே கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி: காட்டிக்கொடுத்த கட்டை விரல்

ADVERTISEMENT

அங்குச் சென்ற வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மலையின் பாதி அளவிற்கு குடியிருப்புகள் இருப்பதால் யானையை விரட்ட வேண்டும் எனவும் மீண்டும் யானை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்ட நாள்கள் கழித்து அப்பகுதியில் மலைமீது சென்ற யானையை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அதேவேளையில் அப்பகுதி மக்கள், மீண்டும் யானை வர துவங்கியிருப்பது அச்சமடைய செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT