தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாதனை படைத்த உண்டியல் காணிக்கை

5th Jul 2022 09:24 AM

ADVERTISEMENT

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், நேற்று ஒரே நாளில் பக்தர்கள் உண்டியலில் இட்ட காணிக்கைத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6.18 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் கோயில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது திருப்பதியில் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

வார இறுதி நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் நிலையில், திங்கள்கிழமை ஒரே நாளில் உண்டியல் காணிக்கை 6.18 கோடி ரூபாய் வந்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க.. திருச்சுழி அருகே கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி: காட்டிக்கொடுத்த கட்டை விரல்

ADVERTISEMENT

திங்கள்கிழமையன்று, கோயில் உண்டியல் காணிக்கை ரூ.6.18 கோடி வந்துள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு அனைத்து சேவைகளும் தொடங்கிய நாளிலிருந்து முதல் முறையாக இந்த அளவுக்கு உண்டியல் காணிக்கை வந்துள்ளதாக தேவஸ்தான நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்குப்பதிவு அதிகாரி பாலாஜி கூறியுள்ளார்.

இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஒருநாள் உண்டியல்  காணிக்கை ரூ.6.45 கோடி வந்துள்ளது. அதுபோல ஜூலை மாதத்திலும் ரூ.6.28 கோடி வந்துள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்துக்குப் பிறகு முதல் முறையாக திங்களன்று உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை எட்டியுள்ளது. இது திருப்பதி திருமலை கோயில் வரலாற்றில் மூன்றாவது முறையாகும்.

வார நாள்களில் 65 ஆயிரம் பக்தர்கள் வரை கோயிலுக்கு வருகை தருகிறார்கள். வார இறுதி நாள்களில் இதுவே 80 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT