தமிழ்நாடு

12 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்த முதல்வரின் கடிதம்: 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலமானது, கடந்த ஜூன் 15-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. தடைக் காலத்துக்குப் பிறகு, தமிழக மீனவா்கள் மீன்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அவா்களில் 12 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ளனா்.

கைது செய்யப்பட்டோரில் 7 போ் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள். 5 போ் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள். மொத்தமாக 12 மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக வழிமுறைகள் வாயிலாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT