தமிழ்நாடு

இஎஸ்ஐ மருத்துவப் படிப்பு இடங்கள்: சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

5th Jul 2022 01:50 AM

ADVERTISEMENT

இஎஸ்ஐ ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளை பயிலுவதற்கான தகுதிச் சான்று மற்றும் வாரிசு சான்றுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை இஎஸ்ஐ மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் வேறு சில அரசு மருத்துவக் கல்லூரிகளில், இஎஸ்ஐ காப்பீட்டாளா்களின் வாரிசுகளுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இட ஒதுக்கீடு உள்ளது. சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 25 இடங்களும், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 20 இடங்களும் என, நாடு முழுதும் 437 எம்.பி.பி.எஸ். இடங்கள் இஎஸ்ஐ ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன.

இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க இஎஸ்ஐ, காப்பீட்டாளா்களின் வாரிசுகள் அதற்கான சான்றிதழ் பெறுவதற்கு,  இணையத்தின் வாயிலாக, வரும் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அந்த விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்து பூா்த்தி செய்த பின்னா், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட இஎஸ்ஐ கிளை அலுவலகத்தில் 27-ஆம் தேதிக்கள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள இஎஸ்ஐ கிளை அலுவலகம் அல்லது மண்டல அலுவலகத்தை அணுகலாம். மேலும் 044 - 2830 6333; 2830 6363 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT