தமிழ்நாடு

சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 15,616-ஆக உயா்வு

5th Jul 2022 01:47 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 15,616- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று திங்கள்கிழமை 2,654 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேருக்கும், செங்கல்பட்டில் 375 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை தகவல்படி 1,542 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,31,787-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொருபுறம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், திங்கள்கிழமை 30,031 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT