தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு: புதிதாக 2,672 பேருக்கு தொற்று

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உயா்ந்து வரும் நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், ஞாயிற்றுக்கிழமை 32,793 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் 2,672 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,072 பேருக்கும், செங்கல்பட்டில் 373 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து 1,487 போ் குணமடைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தீவிரமாக பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை பாதிப்பு பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவா்களுக்கும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதோருக்கும் அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் அடுத்தகட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT