தமிழ்நாடு

ஸ்டார்ட் அப் ரேங்கில் முன்னணி இடம் பெற்ற டான்சிம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

4th Jul 2022 09:46 PM

ADVERTISEMENT

ஸ்டார்ட் அப் ரேங்கில் முன்னணி இடம் பெற்ற டான்சிம் குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (TANSIM) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் ரேங்கிக் 2021-ல் முன்னணி இடம் பெற்றமைக்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிக்க- பிரதமர் மோடியுடன் சுயபடம் எடுத்துக்கொண்ட நடிகை ரோஜா (விடியோ)

மாநிலத்தின் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது வழங்கப்பட்டமைக்காக எஸ்.நாகராஜன் மற்றும் ஆர்.வி. சஜீவனா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்துவதற்கு இந்த அரசு எடுத்துவரும் பல புதுமையான நடவடிக்கைகளினால், எதிர்வரும் ஆண்டுகளில் நமது மாநிலம் சிறந்த செயல்திறன் கொண்ட தரவரிசையில் மேலும் உயர முடியும் என நம்புகிறேன். டான்சிம் குழு வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT