தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,654 பேருக்கு கரோனா

4th Jul 2022 07:41 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 5 ஆவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.   

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,654 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,85,429-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,066 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிக்க- முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 375, கோவை 144, திருவள்ளூர் 135, திருச்சி 102 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,31,787-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15,616 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT