தமிழ்நாடு

உலக தமிழர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

4th Jul 2022 11:29 AM

ADVERTISEMENT


உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் நாம். 

ஒரு நாட்டில் மட்டும் வாழும் இனம் தமிழினம், 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய் வீடு. 

ADVERTISEMENT

இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். 

வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. 
வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. 

இதையும் படிக்க | முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கியது!

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும். 

தமிழன் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவன் கண்ணீரை துடைக்க குறிக்கோள் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் அரசாக திமுக அரசு அமையும். திராவிடம் என்ற சொல் ஒரு காலத்தில் இனத்தின் பெயராக இருந்தது. ஒராண்டாக ஒரு இயக்கத்தின் பெயராக உள்ளது. 

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்ததும், தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காப்பது திமுக அரசு.

1983 முதல் இன்று வரை தமிழ் காப்பு போராட்டங்கள் திமுகவால் நடத்தப்பட்டன. 

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும். 

இருமொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான். 

திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலயங்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான். திராவிடம் என்ற தொல்லை திட்டமிட்டு தான் குறிப்பிட்டு வருகிறேன். 

பிளவுப்படுத்தும் கருவி மதம்: தமிழர்களை பிளவுப்படுத்தும் கருவியாக மதத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழினத்தை மேம்படுத்தும் எண்ணத்தோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாடாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. 

சாதியையும், மதத்தையும் தாண்டி மொழியால் இணைக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு. இறை நம்பிக்கை என்பது அவரவர் உரிமை அதில் தலையிட மாட்டோம் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT
ADVERTISEMENT