தமிழ்நாடு

தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை: தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு என்று  வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை ஆண்டு விழாவில் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

உலகின் மிக மூத்த மொழிகளில் முதல் மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஒரு நாட்டில் மட்டுமே வாழும் இனம் தமிழினம், 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கைகளில் வாழ்கிறார்கள். தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும் தமிழ்நாடு தான் தாய் வீடு. உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வாழும் இனம் தமிழினம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.


தமிழுக்கு பழம்பெருமை இருப்பதால் அதுகுறித்து பேசுகிறோம்: அவர்களுக்கு பேச எந்த பெருமையும் இல்லை. வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியத்தை திமுக அரசு உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் குறு தொழில் செய்ய மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும். 


தமிழ்நாடு என பெயர் சூட்டியது திமுக அரசு தான். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு, ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி என கொண்டு வந்தது திமுக ஆட்சி தான். தமிழுக்கு செம்மொழி அங்கிகாரத்தை பெற்று தந்தது திமுக அரசு. 

இரு மொழிக் கொள்கையை நிறைவேற்றியது திமுக அரசு தான். தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது திமுக அரசு தான். சாதியையும், மதத்தையும் தாண்டி மொழியால் இணைக்கும் வல்லமை தமிழுக்கு உண்டு. இறை நம்பிக்கை என்பது அவரவர் உரிமை.தலையிட மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT