தமிழ்நாடு

'சூழலை மாசுபடுத்தாமல் தொழில்கள் வளர்வதற்கு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'

DIN

சூழலை மாசுபடுத்தாமல் தொழில்கள் வளர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், சூழலுக்கும், சுற்றியுள்ள மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த மணலி தனியார் இரும்பு தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் 25.04.2022 அன்று கோரிக்கை விடுத்திருந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மனு, முதல்வர் தனிப்பிரிவில் மனு, கள ஆய்வு என மக்கள் நீதி மய்யத்தின்  மாவட்ட நிர்வாகிகளால் தொடர் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது.

தற்போது, விதிமீறல்களில் ஈடுபட்ட காரணத்திற்காக அந்தத் தொழிற்சாலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மூடுவதற்கான வழிமுறைகளும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழலை மாசுபடுத்தாமல் தொழில்கள் வளர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT