தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஜூலை 6-ல் விசாரணை

DIN

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு வரும் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது.

அதிமுக பொதுக்குழு கூடியவுடன், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்து மனு அளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

SCROLL FOR NEXT