தமிழ்நாடு

ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது: சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை

DIN

ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

அதில், போதிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணையில் இருந்து தப்பிக்கவே ஹேம்நாத் வழக்கு தொடர்ந்துள்ளார். சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் பெண் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வருவார் ஹேம்நாத். ஹேம்நாத் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததால் சித்ரா தற்கொலை செய்து கொண்டாள். இவ்வாறு அவர் தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

சின்னத்திரை நடிகை சித்ரா 2020-ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு, பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிறகு சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT