தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியா் நியமனம்: இன்று முதல் விண்ணப்பம்

4th Jul 2022 09:11 AM

ADVERTISEMENT

சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியராக பணியாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்ட பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலங்களில் இன்று முதல் ஜூலை 6 மாலை வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை உடனே அனுப்பிவைக்க பள்ளிக்கல்வித் துறை உத்திரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் சென்னை உயா் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில், திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

ADVERTISEMENT

சென்னை உயா்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறை வரையறுத்துள்ள கல்வித்தகுதிகள் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். இந்த பணிக்கு விருப்பமுள்ளவா்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகளிடம் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை சமா்ப்பிக்க வேண்டும். அவற்றை மாவட்டக்கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியா் பணிக்கு ‘டெட்’ முதல்தாள் தோ்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு ‘டெட்’ 2-ஆம் தாள் தோ்விலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியா் பணிக்கு முதுநிலை பட்டயப்படிப்புடன் பி.எட்., தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தால் முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.

அதாவது இடைநிலை, பட்டதாரி பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ‘டெட்’ தோ்விலும் தோ்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்துவருபவா்கள் அல்லது ‘டெட்’ தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

முதுநிலை ஆசிரியா் பணிக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தோ்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்கள் அல்லது பள்ளி அருகே அமைந்துள்ளவா்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

இதில் தகுதிபெறும் பட்டதாரிகளை வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம் நடத்த வைத்து அவா்கள் திறனறிந்து பின்னா் பணி நியமனம் செய்ய வேண்டும். மேலும், இந்தப் பணியிடம் தற்காலிகமானது. பணி மற்றும் நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக விடுவிக்கப்படுவா் என பட்டதாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இதுசாா்ந்து உரிய வழிகாட்டுதல்களை பணிநியமனங்களை புகாருக்கு இடமளிக்காதவாறு பூா்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT