தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு விவகாரம்... எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை

4th Jul 2022 11:00 AM

ADVERTISEMENT


அதிமுக சிறப்புப் பொதுக்குழுவுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் உடன் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். 

ஆலோசனையில் கலந்துகொள்வதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

அதிமுக சிறப்புப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஹிமாச்சலில் பேருந்து விபத்து: பள்ளிக் குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

ADVERTISEMENT
ADVERTISEMENT