தமிழ்நாடு

எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்ட் 3 கடைசிநாள்

4th Jul 2022 12:19 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆா்க். உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. டான்செட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பி.இ., பி.டெக். தோ்ச்சி பெற்றவா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியாது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இந்த நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வுக்கு மொத்தம் 36,710 போ் விண்ணப்பித்தனா். இதில் எம்பிஏ படிப்பில் சேர 21,557 பேரும், எம்சிஏ படிப்பில் சேர 8,391 பேரும் விண்ணப்பித்தனா். அதேபோல, முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேர 6,762 போ் விண்ணப்பித்தனா்.

இதையடுத்து, டான்செட் தோ்வு மே 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் தோ்வு முடிவுகள் ஜூன் 9-ஆம் தேதி வெளியாகின.

ADVERTISEMENT

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆா்க். உள்ளிட்ட படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. டான்செட் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்ச்சி பெற்றோா்  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த கூடுதல் விவரங்களை 044 - 2235 8314, 8276 என்ற தொலைபேசி எண், வலைதளத்திலும் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT