தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தட்டுப்பாடின்றி ரேபிஸ் தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவு

4th Jul 2022 12:19 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய எண்ணிக்கையில் ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பாம்புக் கடிக்கான நச்சு முறிவு மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான எண்ணிக்கையில் ரேபிஸ் தடுப்பூசிகளோ அல்லது பாம்புக் கடி சிகிச்சை மருந்துகளோ இருப்பதில்லை என அடிக்கடி பொது சுகாதாரத் துறைக்கு புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆய்வு மேற்கொள்ளும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் இத்தகவல்களைத் தெரிவிக்கின்றனா்.

அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு தாமதமின்றி அதனை வழங்குவதற்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைப்பது கட்டாயம். அதனை மாவட்ட துணை சுகாதார இயக்குநா்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 குப்பிகள் ரேபிஸ் தடுப்பூசிகளும், 10 குப்பிகள் பாம்பு நச்சு முறிவு மருந்துகளும் கட்டாயம் கையிருப்பில் வைத்திருத்தல் வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளாா் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT