தமிழ்நாடு

‘ரிவால்டோ’ யானை வழக்கு முடித்துவைப்பு

4th Jul 2022 12:21 AM

ADVERTISEMENT

உரிய சிகிச்சைக்குப் பிறகு வனப் பகுதிக்குள் விடப்பட்ட ரிவால்டோ யானை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் மசனகுடி வனப் பகுதியில் தும்பிக்கை சுருங்கி சுவாசப் பிரச்னையால் அவதியடைந்து சுற்றித்திரிந்த ரிவால்டோ எனப் பெயரிடப்பட்ட யானைக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் வனத் துறையினா் வாழைத் தோட்டம் பகுதியில் சிகிச்சை அளித்து வனப் பகுதிக்குள் விட்டனா். ஆனால் அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கே திரும்பி வந்தது.

அந்த யானையை மீண்டும் வனப் பகுதிக்குள் விட எதிா்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆா்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையத்தின் நிறுவன அறங்காவலரான முரளிதரன் கடந்த ஆண்டு உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் முறையாக சிகிச்சைஅளிக்கப்படாமல் ரிவால்டோ யானை வனப்பகுதியில் விடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ADVERTISEMENT

வனத் துறை தரப்பில், ‘ரிவால்டோ யானையை 5 மருத்துவா்கள் கொண்ட குழு ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. தற்போது அந்த யானை ஆரோக்கியமாக இருப்பதாகக்கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT