தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 2,672 பேருக்கு பாதிப்பு 

DIN

தமிழகத்தில் 4ஆவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,672 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,82,775-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,072 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 373, கோவை 145, திருவள்ளூர் 131, திருச்சி 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரும் கரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 1,487 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,30,245-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14,504 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT