தமிழ்நாடு

மயிலாடுதுறையில் தலைகீழாக நின்று போராட்டம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு மாவட்ட வளர்ச்சிக்குழு மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழன் கணேசன் தலைமை வகித்தார். ரயில் பயணிகள் சங்க பொறுப்பாளர்கள் எஸ்.மகாலிங்கம், சாமி.கணேசன், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், 10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூர் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித்தடத்தோடும் இணைத்திட வேண்டும், மயிலாடுதுறை - திருச்சி விரைவு வண்டியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் வண்டியை திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கும் முடிவை கைவிட்டு திருநெல்வேலி வரை இயக்க வேண்டும், மயிலாடுதுறை - பெங்களூர் பாசஞ்சர் வண்டியை மீண்டும் உடனே இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

இந்த போராட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில், மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வேலு.குபேந்திரன், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் இரா.முரளிதரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
படம்: மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைகீழாக நின்று போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT