தமிழ்நாடு

விராலிமலை: சித்தன்னவாசல் மலையடிபள்ள குளத்தில் விழுந்து தாய், 2 மகள்கள் தற்கொலை

3rd Jul 2022 06:19 PM

ADVERTISEMENT

 

விராலிமலை: சித்தன்னவாசல் மலையடிபள்ள குளத்தில் விழுந்து தாய், 2 மகள்கள் என மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் சித்தன்னவாசல், குடைவரை கோயில், குகை ஓவியம், சமணர் படுக்கை என பல்வேறு சிறப்புகள் பெற்ற சித்தன்னவாசலுக்கு உள்ளுர் மட்டுமல்லாது பல்வேறு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சித்தன்னவாசல் வந்திருந்து சிறப்புகளை கண்டு ரதித்து செல்வார்கள். இதனால் விடுமுறை நாள்கள் மட்டுமல்லாது வேலை நாள்ட்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். 

சித்தன்னவாசல் மலைக்கு பின்புறம் உள்ளது மலையடிபள்ளம் சுமார் 10 அடிக்கு மேல் ஆழம் கொண்ட இந்த பள்ளத்தில் தற்போது நீர் நிரம்பி உள்ளது. 

ADVERTISEMENT

 

இதையும் படிக்க | காரைக்காலில் காலரா: மக்கள் பீதியடைய வேண்டாம் - ஆளுநர் தமிழிசை 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் 16,14 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம்பெண்கள் என 3 பேர் இடுப்பில் கயிறை கட்டிக்கொண்டு நிற்பதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் பார்த்துள்ளனர். இதில், அவர்கள் குளத்தில் நீச்சல் பழகுவதற்காக இடுப்பில் கயிரை கட்டிகொண்டு இருப்பார்கள் என்று நினைத்துள்ளனர். 

இதனையடுத்து சற்று நேரத்தில் கரையில் நின்று கொண்டிருந்த 3 பேரும் காணாததை கண்டு குளத்தருகே சென்று பார்த்துள்ளனர். இதில். இளம்பெண் ஒருவர் நீரில் மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அன்னவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்துக்கு வராததால் போலீஸாரே பெரிய குச்சியில் கட்டப்பட்ட தொரட்டி காளியை கொண்டு இளம் பெண்ணின் இடுப்பில் கட்டியிருந்து கயிறை பற்றி இழுத்தபோது மேலும் இரண்டு பேர் உள்ளிருந்து உயிரிழந்த நிலையில் வந்துள்ளனர். 

நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரையும் மீட்ட போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், உயரிழந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், மாஞ்சான் விடுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு(31) இவரது மகள்கள் கோபிகா((16), தர்ணிகா(12) என்பதும், கணவருருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT