தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,408 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  மழை  குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கி உள்ளது. நேற்று காலை வினாடிக்கு 2512 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 2408 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 103.59 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 102.95 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 68.71டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT