தமிழ்நாடு

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

3rd Jul 2022 04:03 PM

ADVERTISEMENT

 

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க பதிவில், சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை கடந்த 10 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு இன்னும் அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஒப்புக்கொண்டார். அதன்பின் 6 மாதங்களாகும் நிலையில், இன்னும் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்காததை நியாயப்படுத்த முடியாது என்று ராமதாஸ்  விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பொதுக்குழு நடக்காது, நடந்தாலும் செல்லாது: ஓ.பி.எஸ். தரப்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT