தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளம்: பயணிகள் குளிக்கத் தடை

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க புலிகள் காப்பகத்தினர் தடை விதித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. லோயர்கேம்ப், கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளியாறு மின் நிலையம் ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறையில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகமாகியது.

இதன் எதிரொலியாக சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள், ஊழியர்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.


பெரியாறு அணையில்  மழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, தேக்கடி ஏரி, பெரியாறு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை முதல் தொடர் மழை முதல் பெய்து வருகிறது. பெரியாறு அணையில், 29.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 28.2 மி.மீ., மழையும் பெய்துள்ளது.

அணை நிலவரம்

முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நீர் மட்டம் 127.75 அணியாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீர் இருப்பு, 4, 212 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு, 799 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு,  1000 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளி மாநிலத் தோ்தல்: நிறுவனங்கள் விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

காசோலை மோசடி வழக்கில் ஆசிரியருக்கு நீதிமன்றம் உத்தரவு

ஐ.நா.வில் ‘மறைமுக வீட்டோ’: சீனா மீது இந்தியா விமா்சனம்

‘காவிரி பிரச்னையில் கா்நாடக அரசு கபடநாடகம்’

மண் வளத்தை பாதுகாக்க மண் பரிசோதனை அவசியம்

SCROLL FOR NEXT