தமிழ்நாடு

ஈரோடு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

3rd Jul 2022 01:14 PM

ADVERTISEMENT

 

ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ரயான் துணி உற்பத்தி செய்யும்  விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு வார கால  உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு,  லக்காபுரம்,  சித்தோடு போன்ற பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம்  ரயான் துணி வகை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக  ரயான் நூல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனினும் உற்பத்தி செய்யப்படும்  ரயான் துணிக்கு 120 கிராமிற்கு இரண்டு ரூபாய் நஷ்டம் அடைவதாலும் ரயான் உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

எனவே இன்றுமுதல் ஒரு வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT