தமிழ்நாடு

பொதுக்குழு முடிவை ஓபிஎஸ் ஏற்காததால்தான் பிரச்னை: ஜெயக்குமார்

2nd Jul 2022 06:34 PM

ADVERTISEMENT

சென்னை: பொதுக்குழு முடிவை ஓபிஎஸ் ஏற்காததால்தான் பிரச்னை என்று அமைச்சர் முன்னாள் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொறுத்தவரை பொதுக்குழுதான் அதிகாரம் கொண்டது எனவும், பொதுக்குழு முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது என்று  ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
பொதுக்குழு முடிவை ஓபிஎஸ் ஏற்றிருந்தால் திரெளபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்று முன்னாள் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் முதலில் திரௌபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துப் பேசினர். எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவை தெரிவித்தார். 

ADVERTISEMENT

அப்போது, அரங்குக்குள் வந்த ஓ. பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஓ. பன்னீர்செல்வம் மேடையில் ஏறாமல், தனித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி கிளம்பும் வரை காத்திருந்து, பிறகு மேடையில் ஏறி, திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT