தமிழ்நாடு

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 இலங்கை தமிழர்கள் விடுதலை: சீமான் வரவேற்பு

2nd Jul 2022 07:38 PM

ADVERTISEMENT

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன்.

இதையும் படிக்க- தங்க கடத்தல் வழக்கு: கேரளத்தில் வலுக்கும் போராட்டம்

இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

ADVERTISEMENT

இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : Seeman
ADVERTISEMENT
ADVERTISEMENT