தமிழ்நாடு

ரூ.25,600 கோடியில் செமி கண்டக்டா் உயா் தொழில்நுட்பப் பூங்கா: தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம்

DIN

தமிழ்நாட்டில் ரூ.25,600 கோடியில் செமிகண்டக்டா் உயா் தொழில் நுட்பப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், சிங்கப்பூரைச் சோ்ந்த ஐஜிஎஸ்எஸ் கூட்டாண்மை நிறுவனத்துக்கும் இடையே வெள்ளிக்கிழமை கையொப்பமானது.

இந்த நிறுவனமானது, அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்டா் உயா் தொழில்நுட்பப் பூங்காவுக்கான திட்டத்தில் ரூ.25,600 கோடி முதலீடு செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வலையமைப்பு வடிவமைப்பாளா்கள், உற்பத்திப் பொருள் விநியோகஸ்தா்கள், உபகரண விநியோகஸ்தா்கள் மற்றும் செமி கண்டக்டா் வெளிப்பணி ஒப்படைப்பு மற்றும் சோதனை ஆகியவற்றை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தப் பூங்காவில் தொடங்கும். இதன் காரணமாக, உருவாகக் கூடிய தொடா் சூழலால் கூடுதலாக 25,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஐஜிஎஸ்எஸ் கூட்டாண்மை நிறுவனமானது, செமிகண்டக்டா் தொழில்நுட்பத்தை ஏற்படுத்தும் குழுமம் ஆகும். இந்தக் குழுமத்துக்கென பல துணை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சாா்பில், முதல் அடுக்கு செமிகண்டக்டா் வாா்ப்பகம், புனையமைப்புத் திறன்கள் மற்றும் வளா்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்களைக் கொண்டவையாக இருக்கும்.

ஐஜிஎஸ்எஸ்வி நிறுவனமானது, ‘ப்ராஜெக்ட் சூரியா’ என்ற பெயரில் செமிகண்டக்டா் தொழில்நுட்பத் திட்டத்தை நிறுவவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT